search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகிலேஷ் கூட்டணி"

    மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் அமைத்துள்ள கூட்டணியால் பாஜகவை ஒன்றும் அசைக்க முடியாது என பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். #SPBSPAlliance #BJP #RavishankarPrasad
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் எதிரும் புதிருமாக இருந்த சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் பாஜகவை வீழ்த்துவதற்காக பாராளுமன்றத் தேர்தலில் கைகோர்த்துள்ளன. இதுதொடர்பாக, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை இறுதி செய்தனர். 
     
    இதையடுத்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த மாயாவதியும் அகிலேஷ் யாதவும் உ.பி.யில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலா 38 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும், அமேதி மற்றும் ரேபரேலியில் போட்டியில்லை என்றும் அறிவித்தனர். 



    இந்நிலையில், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி அமைத்துள்ள கூட்டணியால் பா.ஜ.க.வை அசைக்க முடியாது என பா.ஜ.க. தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் அமைத்துள்ள கூட்டணியால் மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி பாஜகவை அசைக்க முடியாது.

    பிரதமர் மோடியை தாங்கள் எதிர்த்து நிற்க முடியாது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள், அவருக்கான எதிர்ப்பு மட்டுமே அவர்களுடைய கூட்டணியின் ஒரே அடிப்படை ஆகும் என தெரிவித்துள்ளார். #SPBSPAlliance #BJP #RavishankarPrasad
    ×